கடந்த வருடம் கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றின் பின்னணியில் தேடப்பட்டு வந்த புளுமென்டல் சங்கா என அறியப்படும் பாதாள உலக பேர்வழி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஹமத் சப்ராஸ் என அறியப்படும் சங்காவின் சகாவும் மேலும் ஒரு இந்திய பிரஜையும் இராமேஸ்வரம் துறைமுகத்தை அண்டிய பகுதியில் படகொன்றில் சென்ற வேளையில் விசா இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
ஹேனமுல்ல பகுதியில் 32 வயது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் சங்கா தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment