போதைப் பொருள் விவகாரங்களை கவனிக்கவென விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் நீண்ட கால தாமதத்திற்குள்ளாவது பல சிக்கல்களையும் போதை ஒழிப்புக்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், இதற்கென பிரத்யேக நீதிமன்றம் உருவாக்கப்படுவதன் மூலம் விசாரணைகளை துரிதப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
இப்பின்னணியில், எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment