மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஆளுனர் நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 6 March 2019

மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஆளுனர் நடவடிக்கைமேல் மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களிற்கான  விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை வரத்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ்.சாலி உத்தரவிட்டுள்ளார். இதனடிப்டையில் கல்வி அமைச்சு சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூல பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்ளைக் கோரும் வர்த்தமானியைப் பிரசுரிக்கவுள்ளது.


இது குறித்து விளக்கமறித்த ஆளுனர், போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பாடசாலைகளினால் பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றினை அடையமுடியாது எனவும்  இந்நடவடிக்கை மூலம் மாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்த முடிவதால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளாளதாக தெரிவித்தார்.

மேலும் கல்வி நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்குவதானது காலியில் இடம்பெற்ற ஆளுநர்கள் சந்திப்பின்போது எடுத்த ஒருமித்த கருத்து எனவும்  அவர் குறிப்பிட்டார்.


இப் புதிய நியமனமானது மேல் மாகாண கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும்ம் நன்மையளிக்கும். சுமார் 200 பட்டதாரி ஆசிரியர் வெற்றிடம் நிலவுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-M. Rasooldeen

No comments:

Post a Comment