மேல் மாகாண ஆளுனருக்கு கந்தளாயில் வரவேற்பு! - sonakar.com

Post Top Ad

Saturday 2 March 2019

மேல் மாகாண ஆளுனருக்கு கந்தளாயில் வரவேற்பு!


மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு அவரது கட்சியான தேசிய ஐக்கிய முன்னணியின் திருகோணமலை இணைப்பாளர்களினால் கந்தளாயில் வரவேற்பு நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.


புல்மோட்டையிலும் மாலையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை அங்கு விஜயம் செய்துள்ள மேல் மாகாண ஆளுனரை பொது மக்கள் வரவேற்று உபசரித்துள்ளதுடன் பொதுக் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, மேல் மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டதையடுத்து மேல் மாகாணத்தில் துரிதமாக பல்வேறு சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அதேவேளை திருகோணமலைக்கான இவ்விஜயத்துக்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவும் தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-AM

No comments:

Post a Comment