இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான சலுகை வரி விலக்கை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்க உற்பத்திகளுக்கு இந்திய சந்தையில் தரப்பட வேண்டிய இடத்தினை இந்தியா தரவில்லையெனவும் இவ்வுடன்படிக்கையினால் இந்தியாவே பயனடைந்து வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி பல வருடங்களாக வழங்கப்பட்டு வந்த சலுகையை நீக்கப் போவதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
இச்சலுகையூடாக வருடாந்தம் 5.6 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இந்தியா வரிவிதிப்பின்றி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ள அதேவேளை ட்ரம்பின் நடவடிக்கையால் பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லையென இந்தியா தெரிவித்துள்ளது.
இதேவேளை, துருக்கிக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகையையும் நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment