நாடு திரும்பினார் இந்திய விமானி: இம்ரான் கானின் கௌரவம் உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday 1 March 2019

நாடு திரும்பினார் இந்திய விமானி: இம்ரான் கானின் கௌரவம் உயர்வு!


தமது எல்லைக்குள் வான் தாக்குதல் நடாத்த வந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி, அதன் விமானியை சிறைபிடித்திருந்த போதிலும் போர் - வேண்டாம் சமாதானமே வேண்டும் என பகிரங்கமாக அறிவித்து இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது பாகிஸ்தான் அரசு.தேர்தலை முன் வைத்து போரொன்றை நடாத்த மோடி அரசு மேற்கொண்ட திட்டத்தை தனது சாணக்கியத்தால் முறியடித்து கைதியை திருப்பி ஒப்படைத்ததுடன் இம்ரான் நேற்றைய தினம் நாடாளுமன்றில் ஆற்றிய உரை குறித்து சர்வதேச அளவில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நல்லெண்ண அடிப்படையில் தாம் செயற்படும் அதேவேளை, யுத்தத்தால் யாரும் எதையும் அடையப் போவதில்லையென இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்களுக்கு பாக். நாடாளுமன்றமும் ஆதரவளித்திருந்த அதேவேளை இந்திய ஊடகங்கள் தொடர்ந்தும் பாகிஸ்தான் அடிபணிந்து விட்டதாக பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment