திருப்பதியில் ரணிலின் 'எடைக்கு - எடை' பூஜை - sonakar.com

Post Top Ad

Sunday, 3 March 2019

திருப்பதியில் ரணிலின் 'எடைக்கு - எடை' பூஜை


தனிப்பட்ட விஜயம் ஒன்றின் அடிப்படையில் இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு திருப்பதி கோயிலுக்கு விஜயம் செய்து வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.


இதன் போது, குறித்த கோயிலில் இடம்பெறும் எடைக்கு - எடை வழிபாட்டிலும்  ரணில் ஈடுபட்டுள்ள அதேவேளை குறித்த செயற்பாடு மூலம் குறித்த நபரின் எடைக்கு நிகரான எடையில் தானியம்,  தங்கம் அல்லது பெறுமதி மிக்க உலோகம், அல்லது பணம் வழங்கப்படும் வழக்கமுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க எந்த அடிப்படையில் இவ்வழிபாட்டை மேற்கொண்டார் எனும் தகவல் வெளியிடப்படவில்லையாயினும், எதிர்க்கட்சிகள் ஏலவே பல்வேறு பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment