ஸ்ரீ பாத - சிவ பாதம்: பெயர் மாற்றத்திற்கு ஆளுனர் தடை! - sonakar.com

Post Top Ad

Thursday 7 March 2019

ஸ்ரீ பாத - சிவ பாதம்: பெயர் மாற்றத்திற்கு ஆளுனர் தடை!


ஸ்ரீபாத, சிவனொளிபாத மலை, பாவாத மலை என பல்வேறு பெயர்களால் மதம் சார்ந்து அடையாளப்படுத்தப்படும் அதேவேளை பரவலாக சிங்களத்தில் ஸ்ரீபாத என அறியப்படும் குறித்த பகுதியின் நுழைவாயிலில் ஸ்ரீபாத என்பதற்குப் பதிலாக சிவ பாதம் என பெயர்ப் பலகை நிறுவ மஸ்கெலிய பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு தடை விதித்துள்ளார் மத்திய மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன.


மஸ்கெலிய பிரதேச சபையின் தன்னிச்சையான முடிவு வேறு எந்த அரச திணைக்களங்களுக்கோ, அதிகாரிகளுக்கோ அறிவிக்கப்படாத ஒன்று என விளக்கமளித்துள்ள ஆளுனர் அலுவலகம் பெயர் மாற்றத்திற்கு தடை விதித்துள்ளது.


பௌத்தர்களால் ஸ்ரீபாத எனவும், முஸ்லிம்களால் பாவாத மலையெனவும், இந்துக்களால் சிவனொளி பாத மலையெனவும் கிறிஸ்தவர்களால் சாந்த தோமசின் பாதம் பதிந்த ஆதம் மலையெனவும் குறித்த மலை அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment