யாழ் முஸ்லிம்களுக்கான சனசமூக நிலையம் திறந்து வைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 2 March 2019

யாழ் முஸ்லிம்களுக்கான சனசமூக நிலையம் திறந்து வைப்பு


யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் சனசமூக நிலையம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஜூம்மா தொழுகையின் பின்னர் இல 126 முஸ்லீம் கல்லூரி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட இச்சனசமூக நிலையத்தை பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

கடந்த கால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான குறித்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சனசமூக நிலைய திறப்பு விழாவில் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான ஏ.சி.எம் மூபின் யாழ் மாநகர சபை உறுப்பினர் என்.எம் நிபாஹீர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment