மதுஷ் குழுவுக்கு ஒரு மாத கால விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Friday 1 March 2019

மதுஷ் குழுவுக்கு ஒரு மாத கால விளக்கமறியல்


டுபாயில் கைதான மாகந்துரே மதுஷ் மற்றும் குழுவினருக்கு ஒரு மாத காலம் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இக்குழுவில் அடங்கும் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வரை மீட்கவென தனித்தனியாக அங்கு சென்று சென்றுள்ள சட்டத்தரணிகள் குழு இத் தகவலை வெளியிட்டுள்ளது.

போதைப் பொருள் பாவனையின் பின்னணியிலேயே மதுஷ் குழு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை மதுஷை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான முயற்சிகள் தொடர்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment