ஞானசார தூண்டப்பட்டார்: BBS சட்டமா அதிபருக்கு கடிதம்! - sonakar.com

Post Top Ad

Saturday 2 March 2019

ஞானசார தூண்டப்பட்டார்: BBS சட்டமா அதிபருக்கு கடிதம்!நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படும் ஞானசார, 2016ல் நீதிமன்றில் வைத்து சட்டத்தரணிகளால் தூண்டப்பட்டே பதிலளிக்க நேரிட்டதாகவும் தமது தரப்பு நியாயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையாக முன் வைக்கப்படவில்லையெனவும் விளக்கி சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது பொது பல சேனா.கடந்த சுதந்திர தினத்தில் ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவிய போதிலும் அரசியல் உயர் மட்டத்தின் அறிவுரைக்கமையவே அதற்கான காய்நகர்த்தல் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.

இப்பின்னணியில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பட்டியலில் ஞானசாரவுக்கு இடம் வழங்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றை நாடும் முயற்சியிலும் தமது தரப்பு வாதங்கள் முறையாக முன் வைக்கப்படவில்லையெனவும் பொது பல சேனா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment