
நேற்றைய தினம் முன் வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தனக்கு முழு திருப்தியளிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார் துமிந்த திசாநாயக்க.

எனினும், வாக்களிப்பு என வரும் போது கட்சித் தீர்மானத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெறும் எனவும், அரசாங்கம் எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சி எனும் கலாச்சாரத்தை மாற்றி நல்லதை வரவேற்கப் பழக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தன்னைப் பொறுத்த வரை வரவு-செலவுத் திட்டம் மக்களுக்கு சாதகமான பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment