தனியார் பல்கலையில் கற்க 1.1 மில்லியன் வட்டியில்லாக் கடன்: மங்கள! - sonakar.com

Post Top Ad

Tuesday 5 March 2019

தனியார் பல்கலையில் கற்க 1.1 மில்லியன் வட்டியில்லாக் கடன்: மங்கள!


உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் அரச பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தனியார் பல்கலைக்கழகங்களில் இணைந்து உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்க்கு 1.1 மில்லியன் (11 லட்சம்) கடன் வழங்கும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பட்டப்படிப்பினை நிறைவு செய்து இரு வருடங்களின் பின்னரே கடன் தொகையை செலுத்த வேண்டும் எனவும் 12 வருட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.My Future என பெயரிடப்பட்ட குறித்த கடன் திட்டத்தின் ஊடாக உயர்கல்வியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment