மதுஷை உடனடியாக நாடு கடத்த முடியாது: UAE - sonakar.com

Post Top Ad

Thursday 14 February 2019

மதுஷை உடனடியாக நாடு கடத்த முடியாது: UAE


டுபாயில் போதைப் பொருள் பாவனையின் பின்னணியில் கைதாகியுள்ள பிரபல பாதாள உலக பேர்வழி மதுஷை உடனடியாக நாடு கடத்த முடியாது என இலங்கைக்கு தெளிவு படுத்தியுள்ளது அமீரக நிர்வாகம்.டுபாய் நீதிமன்றில் வழங்கப்படும் தீர்ப்புக்கமைய, தண்டனை வழங்கப்படின் அதனை அங்கு நிறைவு செய்த பின்னரே மதுஷை இலங்கையிடம் ஒப்படைக்க முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ராஜதந்திர நகர்வுகள் ஊடாக மதுஷை இலங்கைக்குக் கொண்டு வரும் முயற்சிகள் இடம்பெறுகின்ற போதிலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் அமீரக சட்டதிட்டங்களுக்கமைவாக மதுஷ் குழுவை அங்கு வைத்து சிறைப்படுத்துவதையே விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment