பால் மா விவகாரத்தின் உண்மை என்ன? NOPP அரசிடம் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Tuesday 19 February 2019

பால் மா விவகாரத்தின் உண்மை என்ன? NOPP அரசிடம் கேள்வி!

https://www.photojoiner.net/image/0hQk08Qc

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் மிருகக் கொழுப்பு மற்றும் எண்ணை உட்பட வேறு கெடுதியான பதார்த்தங்களும் கலந்திருப்பதாக அண்மையில் பிரதியமைச்சர் புத்திக பத்திரண கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து குறித்த விவகாரம் குறித்து  பல்வேறு தரப்பில் ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மறுத்துள்ள போதிலும், இலங்கையில் பால் மா இறக்குமதி ஆரோக்கியமானதில்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது போலவே அரச பரிசோதனைகளும் திருப்திகரமாக இல்லையென பரவலாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நோயாளர் பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு, இது தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொண்டு ஒளிவு மறைவற்ற அறிக்கையொன்றை முன் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்ய்படும் பால் மாக்களில் எவ்வித கலப்புமில்லையென ஹலால் பேரவையெனும் பெயரில் இயங்கும் தனியார் நிறுவனம் மீளிறுதி வழங்குவதுடன் உலமாக்களை வைத்து காணொளிப் பிரச்சாரமும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment