முன்னாள் DIG நாலகவுக்கு மதுஷோடு தொடர்பு: CID விசாரணை - sonakar.com

Post Top Ad

Thursday 14 February 2019

முன்னாள் DIG நாலகவுக்கு மதுஷோடு தொடர்பு: CID விசாரணைடுபாயில் மதுஷோடு கைதான பாடகர் அமல் பெரேரா ஊடாக மைத்ரி கொலைத் திட்ட விவகாரத்தில் கைதான முன்னாள் டி.ஐ.ஜி நாலக சில்வாவுக்கும் மதுஷுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து விசாரிப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.மைத்ரி கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாலக சில்வா, பாதாள உலகத்தினரைக் கொண்டே கொலை செய்ய வேண்டும் என தெரிவித்ததாக பொலிஸ் உளவாளி நாமல் குமார தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment