என் வழியில் மைத்ரியும் வெற்றி பெறுவார்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 February 2019

என் வழியில் மைத்ரியும் வெற்றி பெறுவார்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி


போதைப்பொருள் ஒழிப்பில் மைத்ரிபால சிறிசேன திடமாக இருப்பதாகவும் அவர் தன்னைப் பின்பற்றி அதில் வெற்றுபெறுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ.அண்மையில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்த மைத்ரிபால சிறிசேன, அங்கு டுரேட் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை பாராட்டிப் பேசியிருந்ததோடு இராணுவத்தினரை ஈடுபடுத்தி இலங்கையிலும் போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இப்பின்னணியில் பல நூறு கிலோக்களில் போதைப் பொருள் கைப்பற்றப்படுகின்ற போதிலும் அதன் பின் அவை எங்கு செல்கின்றது என்பது தொடர்பில் சந்தேகமும் வெளியிடப்பட்டு வருகிறது. எனினும் ஜனாதிபதி இது விடயத்தில்  திடமாக நடவடிக்கையெடுப்பார் என டுடேர்டெ. நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பைன்சில் அதிரடி நடவடிக்கைகள் மூலமாக போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தியதோடு பெரும்பாலானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment