ஐரோப்பிய - ஜப்பான் நாட்டவர்க்கு 'ஆறு' மாத கால விசா: அமைச்சரவை முடிவு! - sonakar.com

Post Top Ad

Wednesday 27 February 2019

ஐரோப்பிய - ஜப்பான் நாட்டவர்க்கு 'ஆறு' மாத கால விசா: அமைச்சரவை முடிவு!


ஐரோப்பிய, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் முன் கூட்டிய விசா தேவையின்றி இலங்கை வருவதற்கான அனுமதியை நீடிக்கின்ற அதேவேளை சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஆறு மாத கால ON ARRIVAL விசா வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.


தற்சமயம் இணையம் ஊடாக 30 நாட்களுக்குரிய விசாவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியிருக்கின்ற அதேவேளை, விமான நிலையத்திலும் ON ARRIVAL விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், இனி வரும் காலங்களில் முதற்கட்டமாக வழங்கப்படும் விசாவை ஆறு மாதமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment