தெஹிவளை ஹெரோயின் மீட்பு சம்பவம்; வீட்டை விடுவிக்க உத்தரவு - sonakar.com

Post Top Ad

Friday, 15 February 2019

தெஹிவளை ஹெரோயின் மீட்பு சம்பவம்; வீட்டை விடுவிக்க உத்தரவு


தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்களை அன்றையதினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதான நீதவான் எம்.எம். மிஹால் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். 

இன்றைய விசாரணையின் போது, வீட்டு உரிமையாளருக்கு, ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில்லை என்று வீட்டு உரிமையாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரமீஸ் பசீர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த போதைப் பொருள் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்பட்ட வீட்டை அதன் உரிமையாளருக்கு விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டதாக சட்டத்தரணி ரமீஸ் பசீர் கூறினார். 

கடந்த டிசம்பர் மாதம் 01 சந்தர்ப்பங்களில் 336 கோடி ரூபாய் பெறுமதியான பாரியளவான ஹெரோயின் போதைப் பொருள் தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது.  சுமார் 278 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன், இலங்கை வரலாற்றிலேயே கைப்பற்றப்பட்ட மிகப்பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருள் தொகை இதுவாகும்.

No comments:

Post a Comment