அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக தொழில், தொழிநுட்ப பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு பொறுப்புகளையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இவ்வேண்டுகோள் விஞ்ஞானபூர்வமானதாக இல்லையென ஜனாதிபதி விளக்கமளிததுள்ளதோடு நீர் வழங்கல் அமைச்சருக்கு உயர் கல்வியை வழங்கி ஏலவே அமைச்சுப் பொறுப்புகளை தொடர்பற்ற ரீதியில் உருவாக்கியுள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.
ஒக்டோபர் 26 அரசியல் பிரளயத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் நின்ற சிறு கட்சிகளுக்கு தாராளமாக அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment