மதுஷை நாங்கள் உருவாக்கவில்லை: யாப்பா! - sonakar.com

Post Top Ad

Friday 8 February 2019

மதுஷை நாங்கள் உருவாக்கவில்லை: யாப்பா!


மாகந்துரே மதுஷை உருவாக்கியதும், வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததும் தமது குடும்பமே என நிலவும் கருத்துக்கு மறுப்பு வெளியிட்டுள்ளார் லக்ஷ்மன் யாப்பாவின் புதல்வர் பசத யாப்பா.மதுஷ் என்பவர் தமது சொந்த ஊரான மாகந்துரேயைச் சேர்ந்தவர் என்பதை விட வேறு எந்தத் தொடர்புகளும் இல்லையென தெரிவிக்கின்ற பசத, தனது தந்தை லக்ஷ்மன் யாப்பாவே மதுஷுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொடுத்து நாட்டை விட்டு வெளியேற உதவியதாக தெரிவிக்கப்படுகின்றமையையும் நிராகரித்துள்ளார்.

யாப்பா குடும்பத்தின் பெயர் குறிப்பிடாத நலின் பண்டார, முன்னாள் கூட்டாட்சியில் இரஜாங்க அமைச்சராக இருந்து, தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் ஒருவரே மதுஷை உருவாக்கியதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment