சாரதியைத் தவிர மஹிந்தானந்தவின் புதல்வர் உட்பட ஏனையோர் விடுதலை - sonakar.com

Post Top Ad

Monday 25 February 2019

சாரதியைத் தவிர மஹிந்தானந்தவின் புதல்வர் உட்பட ஏனையோர் விடுதலைபொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை டிபென்டரால் மோதிச் சென்ற விவகாரத்தில் இன்று காலை கைதானோரில் சாரதி தவிர ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் புதல்வர், பிரபல வர்த்தகரின் தம்மிகவின் புதல்வர் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சாரதியைத் தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment