தந்தை 'குடு' விற்கவில்லை: டுபாயில் கைதான நடிகரின் மகள் உருக்கம் - sonakar.com

Post Top Ad

Saturday, 16 February 2019

தந்தை 'குடு' விற்கவில்லை: டுபாயில் கைதான நடிகரின் மகள் உருக்கம்பாதாள உலக பேர்வழி மதுஷின் கேளிக்கை நிகழ்வில் 'கலைஞராக' பங்கேற்கவே தனது தந்தை சென்றதாகவும் அவருக்கும் மதுஷுக்கும் வேறு எந்தத் தொடர்போ அல்லது தமது தந்தை போதைப் பொருள் விற்கவோ இல்லையென தெரிவிக்கிறார் டுபாயில் கைதான நடிகர் ரயனின் புதல்வி.சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்றுடனான நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தமது குடும்பம் இன்னும் வாடகை வீட்டிலேயே குடியிருப்பதாகவும் ரயனுடன் கைதான அமல் மற்றும் நதீமல் பெரேரா ஆகியோர் குடும்ப நண்பர்கள் எனவும் அனைவரும் கலைஞர்களாகவே அங்கு சென்றிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கிறார்.

எனினும், கடந்த 7ம் திகதி தந்தையுடன் சொற்ப நேரம் தொலைபேசியில் உரையாடக் கிடைத்ததாகவும் தமது தலைமுடி வெட்டப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தை நினைத்து பெரும் கவலையுடன் இருப்பதாகவும் தந்தை தெரிவித்ததாக நதாலி வென்ரோயன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment