மதுஷ் குழுவிடம் 'போதைப் பொருள்' இருக்கவில்லை: சட்டத்தரணி! - sonakar.com

Post Top Ad

Monday 11 February 2019

மதுஷ் குழுவிடம் 'போதைப் பொருள்' இருக்கவில்லை: சட்டத்தரணி!


டுபாயில் கைதான பாதாள உலக பேர்வழி மதுஷ் மற்றும் சகாக்கள் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்களே தவிர அவர்களிடம் போதைப் பொருள் இருக்கவில்லையென தெரிவிக்கிறார் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் சார்பில் ஆஜராவதற்காக டுபாய் சென்றுள்ளதாக கூறும் சட்டத்தரணி உடுல் பிறேமரத்ன.மாகந்துரே மதுஷ், கஞ்சிபான இம்ரான், அங்கொட லொக்கா உட்பட முக்கிய பாதாள உலக புள்ளிகள் கைதாகியுள்ள அதேவேளை அவர்கள் எப்போது நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லையெனவும் டுபாய் சட்ட திட்டங்களுக்கமைவாக பொலிசார் கால வரையறையின்றி சந்தேக நபர்களைத் தடுத்து வைத்திருக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்சமயம், கைதானவர்களில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது என்பது தொடர்பில் பொலிசார் முடிவுக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், தாம் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வரை விடுவிக்க முயற்சிப்பதாகவும் தெரிவிககிறார். இதேவேளை மதுஷை மீட்கும் முயற்சியிலிறங்க இலங்கையிலிருந்து சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment