முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த புராதன முக்கியத்துவம் வாய்ந்த தூபிகளில் ஏறிப் படம் பிடிப்பதைத் திட்டமிட்ட செயலாகவே தாம் காண்பதாக கருத்து வெளியிட்டுள்ளார் மிஹிந்த ரஜமகா விகாரையின் பிரதானி தம்மரத்ன தேரர்.
இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த, முஸ்லிம் சமயத் தலைவர்கள் இளைஞர்களுக்கு அறிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இது அடிப்படைவாத செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
திஹாரியில் அரபுக் கல்லூரியொன்றில் கல்வி கற்கும் மூதூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்ததன் பின்னணியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment