இழுபறியில் ஞானசாரவின் 'பொது மன்னிப்பு'! - sonakar.com

Post Top Ad

Sunday, 3 February 2019

இழுபறியில் ஞானசாரவின் 'பொது மன்னிப்பு'!


நீதிமன்ற அவமதிப்பு விவாகரத்தில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கும் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் முதற்கட்டமாக சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் ஞானசாரவின் பெயர் உள்ளடக்கப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக ஞானசாரவின் பெயரை உள்ளடக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் இடம்பெற்றிருந்ததோடு அனைத்து பௌத்த மகாநாயக்கர்களும் இதற்கான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைத்திருந்தனர்.

எனினும், இவ்விவகாரம் பெருமளவு ஊடகங்களில் பேசு பொருளாதனையடுத்து தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment