ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் மையவாடி அமைக்க கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday 21 February 2019

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் மையவாடி அமைக்க கோரிக்கை


25000 இற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திற்குள் மையவாடிக்கான இடம் ஒன்றினை அமைத்துத் தருமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  கோட்டே மாநகர சபை உறுப்பினர் அலி உதுமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மாநகர சபை அமர்வின் போதே அவர் இக் கோரிக்கையை விடுத்தார். மாநகர எல்லைக்குள் இரு ஜும்ஆ பள்ளிவாசல்களும், மூன்று அஹதிய்யா பாடசாலைகளும் காணப்படுகின்றன. ஆனால் எமது மக்களுடைய நீண்டகால தேவையாக இருப்பது மையவாடி ஒன்றாகும்.மக்கள் மரணித்தவர்களை அடக்கம் செய்ய தூரப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால் பாரிய செலவுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

இதற்காக நாம் பல்வேறு தரப்பினர்களிடம் உதவி கேட்டோம். ஆனால் பலனில்லை. முஸ்லிம்களுக்கு மையவாடி அமைத்து தருகிறோம் என்று வாக்குகளை கேட்டவர்கள், வெற்றியின் பின் மறந்து விட்டனர். 

இதற்கு முன்னர் வந்த மேயர்களிடம் இது தொடர்பாக பல கடிதங்கள் கொடுத்தோம். அவர்கள் கடிதத்தை வாங்கி வாக்குறுதிகளை தந்தாலும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது வருத்தப்பட வைக்கும் உண்மை.

அதனால் அவர்களுக்காக எமது ஆளுகைக்குள் உள்ள பிரதேசத்தில் மையவாடி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment