மைத்ரியை ஏற்றுக்கொண்டால் தனியான வேட்பாளர்: பசில் பிரளயம்! - sonakar.com

Post Top Ad

Sunday 17 February 2019

மைத்ரியை ஏற்றுக்கொண்டால் தனியான வேட்பாளர்: பசில் பிரளயம்!


கடந்த ஒக்டோபரில் மைத்ரி - மஹிந்த நட்புறவு மீளவும் மலர்ந்ததன் சூட்சுமம் இதுவரைக்கும் மர்மமாகவே இருக்கின்ற போதிலும் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேன போட்டியடப் போவது உறுதியாகியுள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமது வேட்பாளர் மைத்ரிபாலவே என திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த அணி இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், மஹிந்த ராஜபக்ச இறுதி நேரத்தில் மைத்ரிபாலவை பெரமுனவின் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளக் கூடும் எனும் சந்தேகமும் நிலவி வருகிறது.

இந்நிலையில், அவ்வாறு ஒன்று நடந்தால் பெரமுன சார்பில் தாம் வேறு ஒரு வேட்பாளரை நிறுத்துவது உறுதியென தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச. ஏலவே கோட்டாபே பெரமுன சார்பில் போட்டியிடக்கூடும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment