ரஞ்சனின் 'பேச்சால்' வீட்டிலும் சிக்கல்: நலின் - sonakar.com

Post Top Ad

Monday, 25 February 2019

ரஞ்சனின் 'பேச்சால்' வீட்டிலும் சிக்கல்: நலின்


நாடாளுமன்றில் கொகைன் உபயோகிப்பவர்கள் இருக்கிறார்கள் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளமை தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் நலின் பண்டார.இதை விடுத்து, மேலும் தாமதியாது ரஞ்சன் ராமநாயக்க பெயர்ப் பட்டியலைப் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கும் வீட்டில் இது பற்றிக் கேட்டு மனைவி - மக்கள் நச்சரிப்பதாகவும், இதனால் அரசின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment