யாழ் ஒஸ்மானியா வருடாந்த விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும் - sonakar.com

Post Top Ad

Thursday 14 February 2019

யாழ் ஒஸ்மானியா வருடாந்த விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும்


யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி  கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் அதிபர் ஜனாப் சேகு ராஜிது தலைமையில் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.


புதன்கிழமை(13 ) மதியம் ஆரம்பமான இந்நிகழ்வில்  கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  பிரதம விருந்தினராகவும் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மாநகர சபை உறுப்பினர்களான கே.எம் நிலாம்,  எம் நிபாஹீர் ,வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்   எஸ். உதயகுமார் ,டொபாஸ் நிறுவன உரிமையாளரும் தொழிலதிபருமான  அப்துல் கபூர் நஸ்ரூன்   உள்ளிட்டோரும்  கலந்து சிறப்பித்தனர்.


இதன் போது மாணவர்களின் 100மீற்றர் ஓட்டம் ,பெண்களுக்கான   ஓட்டம், ,உடற்பயிற்சி, இசையும் அசையும் , வினோத உடை  பரிசில்கள் ,சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

மேலும் இவ் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி முதலாம் இடத்தை சாபி (நீலம்) இல்லமும் இரண்டாம் இடத்தை அலி (மஞ்சள்) இல்லமும் மூன்றாவது இடத்தை இக்பால் (சிவப்பு) இல்லமும் பெற்றுக்கொண்டது.

-பாறுக் ஷிஹான்  

No comments:

Post a Comment