இலங்கைக்குள்ளும் லைக்கா கருப்பு பணம்: விமல் குற்றச்சாட்டு! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 February 2019

இலங்கைக்குள்ளும் லைக்கா கருப்பு பணம்: விமல் குற்றச்சாட்டு!


விடுதலைப் புலிகளினால் விட்டுச் செல்லப்பட்ட பணத்தைக் கொண்டு பாரிய வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் லைக்கா நிறுவனம் இலங்கையிலும் தமது கருப்பு பணம் ஊடான வியாபாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் பிரபல ஈ.ஏ.பி. நிறுவனத்தை தந்திரமான நடவடிக்கைகள் ஊடாக கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.

பல நாடுகளில் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள லைக்கா சுபாஸ்கரன் தனது பினாமிகள் ஊடாக ஒப்பந்தத்தை உருவாக்கி ஈற்றில் தனக்குச் சொந்தமான பெட்டிகோ எனும் நிறுவனத்தின் பெயரில் ஈ.ஏ.பி குழுமத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும் உள்நாட்டு வர்த்தகர் ஒருவர் அதிக தொகை கொடுக்க முன் வந்தும் மத்திய வங்கி ஆளுனர் மற்றும் அரச உயர் மட்டத்தின் உதவியில் குறைந்த விலையில் பாஸ்கரனுக்கு விற்கப்பட்டிருப்பதாக விமல் தெரிவிக்கிறார்.ஐரோப்பாவில் பல தொலைபேசி சேவை நிறுவனங்களை ஆரம்பித்து அவற்றை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் பெருந்தொகை பண மோசடியில் ஈடுபட்ட பின்னணியைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும்  சுபாஸ்கரனின் வர்த்தக நடவடிக்கைகள் தமிழ் சமூகத்திலேயே பெரும் சலசலப்பை உருவாக்கி வருவதுடன் தென்னிந்திய சினிமாவில் மேற்கொள்ளப்படும் பாரிய முதலீடுகள் கருப்பு பணத்தைக் கொண்டே இடம்பெறுவதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே, விமல் வீரவன்ச இவ்வாறு குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளதுடன் மஹிந்த அரசு காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் பிரத்யேக ஒப்பந்ததத்தை செய்து கொண்ட லைக்கா நிறுவனம் நிர்ணய விலையை விடவும் குறைந்த விலையில் விமானப் பயணச் சீட்டுக்களை விற்றதுடன் ஒவ்வொரு பயணச் சீட்டுக்கும் மேலதிகமாக தொலைபேசி சேவையில் கிரடிட் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment