டுபாய்: மதுஷுடன் கைதானவர்களுள் ஒன்பது பேர் விடுதலை - sonakar.com

Post Top Ad

Friday 8 February 2019

டுபாய்: மதுஷுடன் கைதானவர்களுள் ஒன்பது பேர் விடுதலை


டுபாயில் பாதாள உலக பேர்வழி மாகந்தேரே மதுஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்த நாள் கேளிக்கை நிகழ்வில் போதைப் பொருள் கைவசம் வைத்திருந்த சந்தேகத்தில் கைதான 31 இலங்கையர்களுள் ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளடங்களாக ஒன்பது பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.வேறு பெயரில் டுபாயில் வாழ்ந்து வரும் மதுஷை டுபாய் பொலிசார் ஊடாக கைது செய்ய வைத்தது தாமே என ஸ்ரீலங்கா பொலிஸ் உரிமை கொண்டாடியுள்ளது. எனினும், கைதானவர்களை நாடு கடுத்தும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையில் இல்லையென்பதால் மதுஷை இலங்கைக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைதானவர்களுள் முஸ்லிம் பெயர் கொண்ட சிலரும் உள்ளடக்கம் என்பதுடன் சுமார் 125 பேர் கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில் போதைப் பொருள் கையில் வைத்திருந்த அல்லது உட்கொண்ட சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையம் அங்கொட லொக்கா என அறியப்படும் மேலும் ஒரு பாதாள உலக பேர்வழி குறித்த நேரத்தில் வெளியில் சென்றிருந்ததால் தப்பிக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment