ரணில் - மைத்ரி முறுகலால் நாட்டுக்குத்தான் இழப்பு: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday 16 February 2019

ரணில் - மைத்ரி முறுகலால் நாட்டுக்குத்தான் இழப்பு: மஹிந்த


ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவருக்கொருவர் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதால் நாட்டுக்குத்தான் இழப்பு என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


மஹிந்தவுக்கு எதிராக ரணிலுடன் கை கோர்த்து தேர்தலில் வென்ற மைத்ரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபரில் மஹிந்தவுடன் இணைந்து அவரை சட்டவிரோதமாக பிரதமராக நியமித்திருந்தார். எனினும், நீதிமன்ற தலையீட்டினால் மஹிந்த பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ரணில் பிரதமரானார்.

ஆயினும், ஜனாதிபதி - பிரதமருக்கிடையே நல்லுறவில்லையெனவும் அதனால் நாட்டுக்கு இழப்பெனவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment