ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் புத்தகங்கள் அன்பளிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 23 February 2019

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் புத்தகங்கள் அன்பளிப்பு


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் 'Caring Hands' (கவனிக்கும் கரங்கள்) எனும் சமூக சேவை செயற்றிட்டத்தின் கீழ் களுத்துரை மாவட்டத்தின் மதுகம கல்வி வலயத்தில் இயங்கும் பலாந்தை முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பெருமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் மஜ்லிஸ் சார்பாக அதன் பொருளாளர் இஹ்கான், இணைச் செயலாளர் ஹஸன் அலி, சமூக சேவைகளுக்குப் பொருப்பான ருஸைக் அஹ்மட் மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டர்.


இப்புத்தக அன்பளிப்பானது பல்கலைக்கழக முஸ்லிம் சகோதர சகோதரிகளிடமிருந்து சேர்க்கப்பட்ட நன்கொடையின் மூலம் வழங்கப்பட்டதாகும். இதன் போது மாணவர்களின் அன்றாட கல்வி நடவடிக்கைகளுக்கும், நூல் நிலையத்திற்கும் தேவையான பல பெருமதியான புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மதுகம கல்வி வலயத்தில் அமையப்பெற்றுள்ள இப்பாடசாலை அக்கல்வி வலயத்தில் உள்ள ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையாகும்.
அரசியல்வாதிகளினால் அதிகம் புறக்கனிக்கப்பட்டுள்ள இப்பாடசாலையானது பல்வேறு பௌதீக வளக்குறைபாடுகளுடன் காணப்படுகின்றதை அஙகு சென்ற எமது சகோதரர்கள் தெரிவித்தனர்.
பல திறமையான பிள்ளைகள் கல்வி பயிலும் இப்பாடசாலைக்கு முஸ்லிம் தனவந்தர்களின் உதவி தேவைப்படுகின்றது.

எதிர்காலத்தில் இப்பாடசாலைக்கு பல கருத்தரங்குகளை நடாத்த எமது சகோதரர்கள் உறுதியளித்துள்ளனர்.

-Nafas Nawfar

No comments:

Post a Comment