ஐக்கிய தேசியக் கட்சியை 'இப்போது' தோற்கடிப்பது இலகு: பசில் - sonakar.com

Post Top Ad

Saturday 9 February 2019

ஐக்கிய தேசியக் கட்சியை 'இப்போது' தோற்கடிப்பது இலகு: பசில்


ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பாகவும் இப்போது தோற்கடிப்பது இலகுவானது எனவும் தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.மஹிந்த ராஜபக்சவுக்காக பெரமுன எனும் கட்சியை ஆரம்பித்த பசில் ராஜபக்ச தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையாகவே இலங்கை அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மஹிந்த பெரமுன தற்போது உறுதியான வளர்ச்சியைக் கண்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை இப்போது தோற்கடிப்பது இலகுவானது எனவும் பசில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கூட்டிணைத்து தேசிய அரசமைக்கப் போவதாகம் இம்மாதம் 20ம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment