மதுஷ் தனது ஊரான மாகந்துரையில் தனது தந்தையோடு குடியேறியிருந்த நபர் என்ற வகையில் தனக்கு அறிமுகம் உள்ளதே தவிர, வேறு எவ்வித தொடர்புகளும் இல்லையென நிராகரித்துள்ளார் லக்ஷ்மன் யாப்பா.
கம்புருபிட்டியவிலிருந்து தமது ஊருக்கு வந்திருந்த மதுஷ், அங்கு பல சர்ச்சைகளில் சிக்கி பிற்காலத்தில் ஊரை விட்டு வெளியேறியிருந்ததாகவும் ஊரில் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் தமக்கு அவர்களைத் தெரியும் எனவும், நலின் பண்டார சொல்வது முதல் வேறு எவ்வித தொடர்புகளும் இல்லையெனவும் யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது புதல்வரின் திருமண நிகழ்வுக்கு மதுஷை அழைத்ததாகக் கூறுவதும் சோடிக்கப்பட்ட பொய் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment