எங்கள் கட்சி வேட்பாளருக்கு மாத்திரமே ஆதரவு: பசில் - sonakar.com

Post Top Ad

Tuesday 12 February 2019

எங்கள் கட்சி வேட்பாளருக்கு மாத்திரமே ஆதரவு: பசில்


ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடுபவருக்கே தமது கட்சி ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச.கடந்த வருடம் ஒக்டோபரில் மைத்ரி - மஹிந்த தரப்புகளுக்கிடையில் ஏற்பட்ட நட்புறவின் பின்னணியில் மைத்ரிக்கு ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பெரமுன தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மைத்ரியே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றமையும் பசில் ராஜபக்ச தற்போது தமது கட்சியைச் சேர்ந்தவருக்கே ஆதரவளிக்கும் என தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment