விமானியை விட்டு விடுங்கள்: இந்தியா கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday 28 February 2019

விமானியை விட்டு விடுங்கள்: இந்தியா கோரிக்கை


பாகிஸ்தான் மீது தாக்குதல் நடாத்தச் சென்றிருந்த நிலையில், தனது விமானம் தாக்கப்பட்டதையடுத்து அதிலிருந்து குதித்து பாக் எல்லைக்குள் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது இந்தியா.இரு நாடுகளுக்குமிடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் தேர்தலை இலக்காகக் கொண்டு மோடி அரசு யுத்தமொன்றை ஆரம்பிக்க முனைவதாக பரவலாக கருத்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய மக்களை இலக்கு வைத்து உரையாற்றிய பாக் பிரதமர் இம்ரான் கான், தமது நாடு யுத்தமொன்றை விரும்பவில்லையெனவும் பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானில் இந்திய விமானப் படையினர் பேரழிவுகளை உருவாக்கியுள்ளதாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இந்தியாவின் இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன் விமானியொருவர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment