"போதைப்பொருளற்ற கல்முனை" வேலைத் திட்டம் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Friday 15 February 2019

"போதைப்பொருளற்ற கல்முனை" வேலைத் திட்டம் ஆரம்பம்


கல்முனை பிரதேசத்தில் புகைத்தல் இ போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து சமூகத்தை    புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனை யற்ற பிரதேசமாக மாற்றும் வேலைத்திட்பம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக  விளக்கமளிக்கும்  ஒன்றுகூடலொன்று நேற்று( 14) பிற்ப்பகல்
 கல்முனை முறைத்தீன் ஜூம்ஆ இ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

கல்முனை முகைத்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் டாக்டர் எஸ்.எம் ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் , கல்முனை முகைத்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம் ஏ.அஸீஸ் உரையாற்றுகையில்:


போதைப் பொருள் பாவனையினால் இன்று பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன இதனை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும்  முன்வர வேண்டும் எமது சந்ததியினரை  பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ளது.ஓர்  நல்லொழுக்கமுள்ளவர்களாக நாம் அவர்களை  உருவாக்க வேண்டும் இதற்காக நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுகவுள்ளோம் எமது கல்முனை பிரதேசத்தில் சகல துறைசார்ந்தவர்களின் பங்களிப்புடன் ஆர்ம்ப கட்டமாக இவ் போதை ஒழிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். என்றார் .

மேலும் இவ் நிகழ்வில் பல்துறை சார்ந்தவர்க்களினால் உரை நிகழ்த்தப்பட்டது அதன் அங்கமாக  'போதைப்பொருளும்  இஸ்லாமும் ' எனும் தலைப்பில் மொளவி . கே.எல் . சியானுதீன் அவர்களும், பைசானுல்  மதீனா  அரபுக்கலாபீடத்தின் அதிபர் மெளவி பி.எம்.ஏ. ஜலீல்(பாகவி) அவர்களினால் 'போதைப்பொருள்  பாவனையிலிருந்து விடுபட ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ' பற்றியும் உரையாற்றினர்.

மேலும் 'போதைப் பொருளின் தற்போதைய நிலை 'பற்றி கல்முனை தெற்க்கு சுகாதார அதிகாரி வைத்தியர்  எம்.எச் .றிஸ்பின்அவர்களும்இ'போதைப்பொருளும் சட்டமும்' தொடர்பாக கல்முனை பொலிஸ் பிரிவு பரிசோதகர் ஏ.எல்.ஏ வாஹித் ஆகியோரால்  உரையாற்றப்பட்டது 

மேலும் இதில்  ஆரம்ப கட்டமாக கலந்து கொண்ட பள்ளிவாசல்கள்நிர்வாகிகள் இ உலமாக்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அரச இ அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய செயலணியொன்று ஆரம்பிக்கப்ட்டமை குறிப்பிட்டத்தக்கது .

-எம்.என்.எம்.அப்ராஸ்இஎஸ்.எல்.அப்துல் அஸீஸ்இஎம்.ஐ. சம்சுதீன்

No comments:

Post a Comment