மிஹிந்தலை விவகாரம்: மூதூர் இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 20 February 2019

மிஹிந்தலை விவகாரம்: மூதூர் இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு


மிஹிந்தலையில் புராதன தூபயில் ஏறிப்படம் பிடித்த குற்றச்சாட்டில் அண்மையில் கைதான இரு முஸ்லிம் இளைஞர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 27ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அநுராதபுர பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி ஜனக பிரசன்ன சமரசிங்க, பொலிசார் மேலதிக விசாரணைகளை நிறைவு செய்யும் வகையில் அவகாசத்தை வழங்கியுள்ளார்.

திஹாரி, அரபுக் கல்லூரியொன்றில் கல்வி கற்கும் 18 மற்றும் 20 வயது மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment