தேசிய அரசை உருவாக்கி விட்டு வாருங்கள்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 February 2019

தேசிய அரசை உருவாக்கி விட்டு வாருங்கள்: கம்மன்பிலஅமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்க முன்பதாக தேசிய அரசு அறிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.தேசிய அரசு எந்தக் கட்சிகளின் கூட்டிணைவில் உருவாக்கப்படப் போகிறது என்பது தெளிவு படுத்தப்படாத நிலையில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோருவது அர்த்தமற்றது என கம்மன்பில மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, தேசிய அரசுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும் அதையும் மீறி நாடாளுமன்றில் அரசாங்கம் விவாதத்தை முன்னெடுக்கவுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு உறுப்பினரைக் கொண்டே தேசிய அரசு உருவாக்கம் இடம்பெறவுள்ளதாக பரவலாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment