பெரமுனவின் சேமிப்பில் 2 கோடி ரூபா: பசில் தகவல்! - sonakar.com

Post Top Ad

Friday 8 February 2019

பெரமுனவின் சேமிப்பில் 2 கோடி ரூபா: பசில் தகவல்!


உத்தியோகபூர்வ தலைவரை அறிவிக்க முடியாது தொடர்ந்தும் பினாமி நிர்வாகத்தில் இயங்கி வரும் நிலையிலும் தமது கட்சியிடம் சேமிப்பில் 2 கோடி ரூபா இருப்பதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.சிறிகொத்தாவின் மின்சார கட்டணத்தைக் கூட செலுத்த முடியாது ஐக்கிய தேசியக் கட்சி திணறிய காலம் இருந்ததாகவும் தெரிவிக்கின்ற அவர், தமது கட்சி ஆரம்பம் முதலே செல்வச் செழிப்புடன் இருப்பதாகவும் உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடை மூலமே பெருந்தொகை வைப்பிலிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவற்றை நிரூபிக்க முடியாமல் அரசு தொடர்ந்தும் விசாரணைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment