25 லட்ச ரூபா கொகய்னுடன் இஸ்ரேலிய - இத்தாலிய பிரஜைகள் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 7 February 2019

25 லட்ச ரூபா கொகய்னுடன் இஸ்ரேலிய - இத்தாலிய பிரஜைகள் கைது!


இலங்கையில் பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வரும் அதேவேளை சர்வதேச ரீதியான தொடர்புகளும் வெளிப்பட்டு வருகிறது.



அண்மையில் அமெரிக்க - பங்களதேசிய பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை இதற்கு முன்னர் இந்திய - பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று 25 லட்ச ரூபா பெறுமதியான கொகய்னுடன் இத்தாலிய மற்றும் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இஸ்ரேலிய பிரஜை 25 வயதுடையவர் எனவும் இத்தாலிய பிரஜை 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment