எம்.எஸ்.எச் முஹம்மத் ஹாஜியாருக்கு ஐ.நா 2018 - V விருது - sonakar.com

Post Top Ad

Friday 22 February 2019

எம்.எஸ்.எச் முஹம்மத் ஹாஜியாருக்கு ஐ.நா 2018 - V விருது


ஐ.நா இலங்கைக்கான தன்னார்வ நிலையத்தினால் வழங்கப்படும் சமாதானத்தைக் கட்டியெழுப்பப் பங்களிப்போருக்கான ஐ.நா வீ விருது, கதீஜா பவுன்டேசன் மற்றும் Fight Cancer அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.எஸ்.எச் முஹம்மதுக்கு வழங்கப்பட்டுள்ளது.சமூக வலுவூட்டல் அமைச்சும் - ஐ.நா அமைப்பும் இணைந்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இவ்விருதினை வழங்கி வருகின்றன.

நேற்று முன் தினம், கொழும்பு நெலும் பொகுன அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் விருதினைப் பெற்ற நிலையில், இவ்விருதைப் பெற்ற முதலாவது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நபர் எனும் பெருமையையும் எம்.எஸ்.எச் முஹம்மத் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு, சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான பெட் ஸ்கேனரைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியை எம்.எஸ்.எச் முஹம்மத் முன்னின்று வெற்றிகரமாக நடாத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

-அஷ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment