ஹிஸ்புல்லாவின் MP பதவி வெற்றிடம்: யாருக்கு வாய்ப்பு? - sonakar.com

Post Top Ad

Friday, 4 January 2019

ஹிஸ்புல்லாவின் MP பதவி வெற்றிடம்: யாருக்கு வாய்ப்பு?கிழக்கு மாகாண ஆளுனர் பதவியைப் பெற்றுக்கொண்டதையடுத்து தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் ஹிஸ்புல்லா.கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்றிருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேசியப்பட்டியலில் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது வெற்றிடம் யாரைக் கொண்டு நிரப்பப்படும் எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னராக கிழக்கின் ஆளுனராக அசாத் சாலி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அசாத் சாலி மேல் மாகாண ஆளுனராகவும் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுனராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment