IMF மேலதிக கடனைப் பெற அமெரிக்கா செல்கிறார் மங்கள - sonakar.com

Post Top Ad

Thursday, 10 January 2019

demo-image

IMF மேலதிக கடனைப் பெற அமெரிக்கா செல்கிறார் மங்கள

WkfuZsZ

சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிக கடனைப் பெறுவதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர நாளை அமெரிக்கா செல்வவுள்ளார்.



ஒக்டோபர் 26 அரசியல் பிரளயத்தின் பின்னணியில் 2016ல் இணங்கப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனின் பகுதி நிறுதி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீள நிறுவப்பட்டுள்ள ஐ.தே.க அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய வழிகாட்டல்களுடன் இணங்கி நடக்கும் என்பதை தெரிவித்து மிகுதிக் கடனையும் பெற்றுக்கொள்ளும் நிமித்தம் இவ்விஜயம் அமையவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, திறைசேரி செயலாளர் சமரதுங்க உட்பட்ட பிரமுகர் குழுவினர் இவ்விஜயத்தில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment