புத்தளம் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 January 2019

புத்தளம் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு!


புத்தளம், வணாத்தவில்லு பகுதியில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்புகளை ஒழுங்கு படுத்திய பிரதான சந்தேக நபர்கள் தலைமறைவாக இருக்கின்ற நிலையில் புத்தளத்தில் அவர்கள் ஒளிந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றிருந்தது.இப்பின்னணியில், குறித்த பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மாவனல்லையிலிருந்து வந்திருந்த நபர்களால் காணியொன்று குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்ததுடன் அவர்களுடன் இணைந்து கொண்ட புத்தளத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


மாவனல்லை சந்தேக நபர்கள் வேறும் இடங்களில் புத்தர் சிலைகளை உடைத்து வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, புத்தளத்தில் வெடிபொருட்கள், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment