ஜனாதிபதியும் - எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியுமா? என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இதற்கு முன்னரும் நாடாளுமன்றில் அவ்வாறு இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர் மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கலாம் என மீண்டும் உறுதி செய்துள்ளார்.
டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது காமினி திசாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்திருந்தமையை மேற்கோள் காட்டியே சபாநாயகர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment