பிக்கு வேடம் தரித்து கொலை: மூவர் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 January 2019

பிக்கு வேடம் தரித்து கொலை: மூவர் கைது!


பிக்கு வேடம் தரித்து பிரதேச விகாரையொன்றில் தங்கியிருந்த நபர், உல்பத்கம பகுதியில் 30 வயது ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



கடந்த 17ம் திகதி முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சுரேஷ் ரவீந்திர குமார எனும் நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதேச விகாரையில் பிக்கு வேடம் தரித்துத் தங்கியிருந்த ஒருவரையும்  அதே பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹபரன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment