துப்பாக்கி கலாச்சாரத்தை அடக்கியாக வேண்டும்: நாமல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 January 2019

துப்பாக்கி கலாச்சாரத்தை அடக்கியாக வேண்டும்: நாமல்


நாட்டில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடக்கியாக வேண்டும் என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.கடந்த மூன்றரை வருடங்களில் ஏறத்தாழ தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வருவது குறித்து சுதந்திரமாக தகவல்கள் வெளிவருகின்றன. இதேவேளை, மஹிந்த அரசில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதாள உலகமும் தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது.

எனினும், பாதாள உலகினரைத் தூண்டி விடுவது மஹிந்த அணியென ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முறையான உளவுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடக்க வேண்டும் என நாமல் அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment